அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தலங்கள்

அரியலூர் மாவட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் கோவில்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மாவட்டம் அதன் வளமான வரலாற்றுக்கு முந்தைய புதைபடிவங்களைக் கொண்டது. எனவே அரியலூர் மாவட்டம் ஒரு தொல்லுயிர் விலங்கியல் பூங்காவாகத் திகழ்வதுடன் ‘புவியியல் ஆராயச்சியாளர்களின் மெக்கா’ எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறது. அரியலூர் வரலாறு மற்றும் கலாச்சார நெறிமுறைகளுக்குப் பெயர்ப் பெற்றது. இந்து மதம் மட்டுமல்ல, கிறிஸ்தவம், பௌத்தம் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் புனித நூல்கள் நிறைந்த மாவட்டமாகும். கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவிலை உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது

அரியலூர் பயண வழிகாட்டி - என்னென்ன செய்வது , எப்படி அடைவது | Places to visit  Ariyalur, Things to do and How to reach - Tamil Nativeplanet

1.கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில்- கங்கை கொண்ட சோழபுரம்

2.வேட்டக்குடி கரைவெட்டி பறவைகள் சரணாலயம்

3.சுந்தரேஸ்வரர் கோவில் – மேலப்பழவூர் மற்றும் இரட்டை கோவில்கள் – கீழையூர்

4.ஆலந்துறையார் கோவில் – கீழப்பழுவூர்

5.வைத்தியநாத சுவாமி கோவில் – திருமழபாடி

6.கார்கோடேஸ்வரர் கோவில் – காமரசவல்லி

7.கங்கா ஜடாதீஸ்வரர் கோவில் – கோவிந்தபுத்தூர்

8.ராஜேந்திர சோழீஸ்வரம் கோவில் மற்றும் புத்தர் சிலை – விக்கிரமங்கலம்

9.கல்லங்குறிச்சி கலிய பெருமாள் கோவில்

10.கோதண்டராமசுவாமி கோவில் – அரியலூர்

11.ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை தேவாலயம்

12.செந்துறை, சென்னிவனம் மற்றும் ஸ்ரீபுரந்தான்