உணவில் பூண்டு செய்யும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்

பூண்டு
பூண்டு

பூண்டின் மருத்துவ பயன்கள்

அலுவலகத்தில் அமர்ந்து கொண்டே பணிபுரியும் நம்மில் பலருக்கு முக்கிய பிரச்னை வாயுத்தொல்லை, இதற்கு அருமருந்து பூண்டு. மருத்துவரிடம் சென்று மருந்து வாங்கி உண்பதை விட பூண்டை உணவுடன் தேவையான அளவு சேர்த்து வந்தால் வாயுத்தொல்லை மாயமாகும்.

 

பூண்டின் பொதுவான பலன்கள்.

1. பூண்டு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

வெற்றிலையின் காம்பு மட்டும் கிள்ளி, வசம்பு, திப்பிலி உடன் பூண்டு சேர்த்து, அங்கு அரைத்து பிழிந்து, சாறை வெண்ணீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க மாந்தம் குறையும், மற்றும் சளித்தொல்லையும் விடை பெரும்

2. சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்று நோயை பூண்டு தடுக்கும் வல்லமை கொண்டது.

3. உடல் எடை குறைக்க அல்லது கட்டுப்படுத்த அல்லது ஊளை சதையை குறைக்க, பூண்டு சக்தி வாய்ந்த மருந்து.

4. தொடர்ந்து பூண்டை சிறிதளவு உணவில் சேர்த்து வந்தால் உடல் கொழுப்பை குறைக்கும் வல்லமை கொண்டது.

5. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க அல்லது குறைக்க பூண்டு பெரும் உதவி புரியும்.

கரிசலாங்கண்ணி கீரை, பூண்டு மற்றும் மிளகு ஒன்று சேர்த்து அரைத்து காலையில் மற்றும் ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் சோகை நோய் தீரும்

6. புற்றுநோய் செல் பரவாமல் தடுக்க பூண்டு உதவி புரிகிறது.

7.அலர்ஜி அல்லது ஒவ்வாமைக்கு பூண்டு அரும் பெரும் மருந்து.

8. பூண்டு சாற்றை உடல் பாகத்தின் மேல் தடவ மூட்டு வலி குறைந்து , வீக்கம் குறையும்.

அதேபோல், பூண்டு மற்றும் துத்தி இலை, இரண்டும் சம பங்கு சேர்த்து நசுக்கி, நல்லெண்ணெய் இட்டு கொதிக்க காய்ச்சி, உடலில் தடவ , உடல் வலி குறையும்

9. உணவு செரிமானத்திற்கு பூண்டு மிக பெரிய பங்காற்றுகிறது.

பூண்டை நெய் அல்லது எண்ணெயில் வறுத்து, உனவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயு தொல்லை முற்றிலும் நீங்கும்.

10. அதிக ரத்த அழுத்தம் அல்லது உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து பூண்டை உட்கொண்டால் ரத்த அழுத்தம் குறையும்.

நன்கு கொதிக்க வைத்த பாலில் மூன்று பூண்டு திரிகளை போட்டு பருகினால் ரத்த கொதிப்பு நாள்பட அடங்கும். நன்கு தூக்கம் வரும்.

11. பொன்னாங்கண்ணி கீரை மற்றும் பூண்டு ஒன்று சேர்த்து வேக வைத்து, தண்ணீர் வெடிக்காமல் சாப்பிட்டால் மூலநோய் நீங்கும் அல்லது குறையும்

12. பூண்டு மற்றும் சிறிதளவு உப்பு இரண்டையும் நன்று மென்று தின்றால்,நெஞ்சு எரிச்சல் , நெஞ்சி கரிப்பு , வயிறு வலி குறையும்.

13. குடுப்பைமேனி சாறு மற்றும் பூண்டையும் நசுக்கி பிழிந்து எடுத்த சாரில் , சிறிதளவு உப்பு இட்டு குழந்தைக்கு கொடுத்தால், வயித்தில் உள்ள புழுக்கள் வெளிவந்துவிடும் குழந்தைகளின் வயிறு சுத்தமாகும்.

Leave a Reply