உணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 1

உணவே மருந்து

உணவு தமிழ் பழமொழிகள்

 • காட்டுலே புலியும் வீட்டுலே புளியும் ஆளைக் கொள்ளும்
 • போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே
 • சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது
 • தன் காயம் காக்க வெங்காயம் போதும்
 • வாழை வாழ வைக்கும்
 • அவசர சோறு ஆபத்து
 • ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்
 • இரைப்பை புண்ணுக்கு எலும்பிச்சை சாறு
 • ரத்த கொதிப்புக்கு அகத்தி கீரை
 • இரும்பல் போக்கும் வெந்தய கீரை
 • உஷணம் தவிர்க்க கம்பங்களி
 • பொங்குற காலத்தில் புளி மங்குகிற காலத்தில் மாங்கா
 • எண்ணெய் குடத்தை சுற்றிய எறும்பு போல

இரும்பல் போக்கும் வெந்தய கீரை

தொடர் இருமலை போக்க வல்லது வெந்தய கீரை. வெந்தய கீரையின் மகத்துவத்தை நாம் எடுத்துரைக்க 10 கட்டுரைகளே பத்தாது. வெந்தய கீரையை நன்கு கடைந்து, பருப்பு சேர்த்து வேகவைத்து சாப்பிட்டால் இரும்பல் குறையும்.

உஷணம் தவிர்க்க கம்பங்களி

கம்பு உடலுக்கு குளிர்ச்சியானது என அனைவரும் அறிந்ததே, தினை பயிர்களின் மகத்துவத்தை நாம் மறந்தே போய்விட்டோம், அதை வருங்கால சந்ததிக்கு மீது தரும் பொறுப்பு நமக்கு உள்ளது. கம்பங்களி செய்து அதை காலை மற்றும் மதிய வேளைகளில் உண்னலாம், இது உடலிற்கு குளிர்ச்சியையும் தெம்பையும் கொடுக்கும்.

காட்டுலே புலியும் வீட்டுலே புளியும் ஆளைக் கொள்ளும்

இந்த பழமொழி புளி அதிகமாக சேர்க்கும் விபரீதத்தை உணர்த்த தமிழ் முன்னோர்களால் பயன்படுத்தப்படுகிறது. காடுகளில் புலி விலங்குகளையும், ஆட்களையும் கொள்ளும், அதே போல் வீட்டில் நாம் உணவிற்கு சேர்க்கும் புளியும் ஆளை கொள்ளும் தன்மையுடையது. அதனால் சுவைக்காக அளவறிந்து உபயோகிக்க வேண்டும்

போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே

காய்ச்சல் ஜுரம் உள்ளவர்கள் மட்டும் வந்து சில நாட்களே ஆனவர்கள் புளியை தவிர்த்தல் நலம். அதையே தன் இந்த பழமொழி போன ஜுரத்தை மீண்டும் புளி சாப்பிட்டு வரவழைத்து கொள்ளாதே என்று அறிவுறுத்துகிறது.

சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது

சீரகம் நல்ல ஜீரண சக்தியை தரும், எனவே அனைத்து உணவுகளிலும் சீரகம் சேர்ப்பது சிறப்பு. இதை வலியுறுத்தும் விதமாக வே இந்த பழமொழி அமைந்துள்ளது. சீரகம் இல்லாத உணவும் சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.

அவசர சோறு ஆபத்து

வேகமாக உணவு உண்ணும் போது சரியாக பற்களால் அறைப்படுவதில்லை, மேலும் உமிழ்நீர் சுரப்பிகள் உணவுடன் கலப்பதில்லை, இதனால் நமக்கு வாயுத்தொல்லை, அஜீரணம் என பல உபாதைகள் ஏற்படுகின்றன. இதையே தான் இந்த பழமொழி அவசர சோறு ஆபத்து என்கிறது. அதோடு மட்டுமில்லாமல் அவசரமாக செய்யப்படும், உடனடி உணவு வகைகளும் ஆபத்தை தரக்கூடியவை.

தன் காயம் காக்க வெங்காயம் போதும்

காயத்தை ஆற்ற கூடிய சக்தி கொண்டது வெங்காயம். இதில் உள்ள அமிலம் காயத்தை ஆற்றும் வல்லமை கொண்டது.

இரைப்பை புண்ணுக்கு எலும்பிச்சை சாறு

இரைப்பை புண்ணுக்கு, எலும்பிச்சை சாறு உடனடி மருந்தாக வேலை செய்யும். இரப்பை புண் உள்ளவர்கள் தொடர்ந்து காலை வேலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் எலும்பிச்சை சாறு பருகினால் இரைப்பை புண் குறையும்

ரத்த கொதிப்புக்கு அகத்தி கீரை

High Blood Pressure என்கிற அதிக ரத்த கொதிப்பு உள்ளவர்கள் அகத்திக்கீரை உண்டால் ரத்த அழுத்தம் சீராகும் என்கிறது இந்த பழமொழி. இது மட்டுமின்றி அகத்திக்கீரை உணவிற்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன.

வாழை வாழ வைக்கும்

வாழை வாழவைக்கும் என்ற பழமொழி எளிதாக பொருள் புரியும்படியால் விளக்க வேண்டியதில்லை. வாழைப்பழம் நம் பகுதி சார்ந்த உணவாகும், எனவே இது ஆரோக்கியத்திற்கு உகந்தது. உணவு குடலை சீராக்க வாழைப்பழம் சிறந்த இயற்கையான மருந்து.

Leave a Reply