உணவே மருந்து தமிழ் பழமொழி வடிவில் பகுதி 2

உணவே மருந்து

உணவு பழமொழிகள்

 • பித்தம் தணிக்க நெல்லிக்காய்
 • பருமன் குறைய முட்டைகோஸ்
 • வாய் துருநாற்றம் தீர்க்க ஏலக்காய்
 • வாத நோய் தடுக்க அரைக்கீரை
 • வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
 • மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு
 • பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
 • தேனுடன் இஞ்சி ரத்தத்துக்கு தூய்மை
 • தலைவலி நீங்க முள்ளங்கி சாறு
 • ஜீரண சக்திக்கு சுண்டைக்காய்
 • சூட்டை தணிக்க கருணை கிழங்கு
 • சிறுநீர் கடுப்புக்கு அன்னாசியில் பழம்
 • சித்தம் தெளிய வில்வம்
 • கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராட்சை
 • குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை
 • கல்லீரல் பலம் பெற கொய்யாய் பழம்

உணவு பழமொழியின் விளக்கங்கள்

நெல்லிக்காய் / முட்டைகோஸ் / முட்டைகோஸ் / ஏலக்காய் /அரைக்கீரை / மணத்தக்காளி / வாழைப்பூ கூட்டு

உடலில் உள்ள பித்தத்தை தணிக்க நெல்லிக்காயை தினமும் காலை வேலையில் தின்பது நலம். அதிக உடல் பருமன் உள்ளவர்கள் முட்டை கோஸை உண்ணலாம், வயிறு சீக்கிரம் நிறைந்தாலும், குறைந்த அளவே உணவு உட்கொள்ள நேரிடும். வாய் துறுநாற்றம் உள்ளவர்கள் பச்சை ஏலக்காயை மென்று தின்றால், வாய் துறுநாற்றம் போகும், மேலும் வாய் துறுநாற்றம் மெதுவாக குறைய ஆரம்பிக்கும். முதுமை காலத்தில் வாத நோயை தடுக்கும் சக்தி கொண்டது அரைக்கீரை, அனைத்து கீரைகளும் அதிக சக்தியை கொண்டிருந்தாலும், அரைக்கீரை மகத்துவம் இன்னும் அதிகம். அதிகம் வாந்தி மற்றும் குமட்டல் உள்ளவர்கள் மணத்தக்காளி கடைந்து சாப்பிடலாம் என்கிறது இன்னொரு பழமொழி. அதேபோல் வாழைப்பூ கூட்டு மூல நோய் உள்ளவர்களுக்கு, பப்பாளியை போன்று அருமையான மருந்து.

பூண்டு / தேன் / முள்ளங்கி சாறு / சுண்டைக்காய் / கருணை கிழங்கு

பூண்டு உடலில் உள்ள கிருமி தொற்றை சரி செய்ய உதவுகிறது, ரத்தத்தில் உள்ள தொற்றையும் சரி செய்யும் வல்லமை கொண்டது பூண்டு. தேனுடன் இஞ்சியை சேர்த்தால் பருகி வந்தால் ரத்தத்தில் உள்ள அசுத்தம் நீங்கும். முள்ளங்கியில் சாறு போட்டு கடித்தால் தலைவலி குறையும் அல்லது நீங்கும். ஜீரண சக்தியை அதிகரிக்க சுண்டைக்காய் நல்ல தீர்வு, வயதானால் அஜீரண கோளாறு ஏற்படுவது இயல்பு, அந்த காலகட்டத்தில் சுண்டைக்காய் நல்ல பலன் கொடுக்கும் என்கிறது இந்த பழமொழி. கருணை கிழங்கு உடல் சூட்டை தணிக்கும் வல்லமை கொண்ட உணவவகையாகும். கருணை கிழங்கை சரியான முறையில் வேகவைத்து சமைத்தல் அவசியம்.

அன்னாசி பழம் / வில்வம் இலை / பன்னீர் திராட்சை / அகத்திக்கீரை / கொய்யாய் பழம்

வெயில் காலங்களில் ஏற்படும் சிறுநீர் கடுப்புக்கு உகந்த மருந்து அன்னாசி பழம். இதை சாறாக மட்டுமில்லாமல் சீவி துண்டாக்கி அப்படியே சாப்பிட்டால் பலன் பலமடங்கு உண்டு. ஆன்மீக ரீதியாக சிறப்பு பெற்ற வில்வ மரத்திற்கு, மருத்துவ ரீதியாகவும் பல இயற்கை குணங்கள் உண்டு. நம் சித்தம் / புத்தி தெளிய வில்வம் இலை உகுந்தது என்கிறது தமிழ் சித்த மருத்துவ பழமொழி. அதே போல் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்க பன்னீர் திராட்சை உபயோகப்படுகிறது. மேலும் குடல் புண் நலம் பெற அகத்திக்கீரையை கடைந்து சமைத்து சாப்பிடலாம், கொய்யாய் பழமாகி உண்டு வந்தால் கல்லீரல் பலப்படுமென்கிறது இன்னொரு பழமொழி.

மேற்கூறிய பழமொழிகளிலிருந்து நம் அறிந்து கொள்வது என்னவெனில், பழங்கால தமிழர்களின் உணவு பாரம்பரியம் மற்றும் மருந்துகள் இரண்டும் இயற்கையோடு ஒன்றிணைந்து உள்ளதே. நம் முன்னோர்கள் மருந்துகளை அதிகம் தேடிப்போனதில்லை, இருக்கும் உணவு மற்றும் பழ வகைகளை சரியான விகிதத்தில் உண்டு அவர்களை பேணிகாத்துளள்னர் என்பது நன்கு புலப்படுகிறது.

Leave a Reply