கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்

நூல் : திருக்குறள்

பால்: அறத்துப்பால்

அதிகாரம் : கடவுள் வாழ்த்து

குறள் 2:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

மு.வரதராசன் குறள் விளக்கம்:

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.


சாலமன் பாப்பையா குறள் விளக்கம்:

தூய அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான் என்ன?.

English Meaning

What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?


Transliteration(Tamil to English):

Katradhanaal aaya Payanen kol VaalaRivan
natraal Thozhaaar enin