காஞ்சிபுரம் ஆதி அத்தி வரதர் தரிசனம்

 

காஞ்சிபுரத்தில் அமையப்பெற்றுள்ள வரதராஜ பெருமாள் கோவில் பல சிறப்புகளை கொண்டுள்ளது. இங்கு பிரம்மாவால் பூசிக்கப்பட்ட அத்தி வரதர் சிலை அத்தி மரத்தால் செய்யப்பட்டது என்றும் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. ஆதி அத்தி வரதர் சிலையானது திருக்குளத்தில் உள்ள அனந்த சிரஸ் என்ற பாதாள அறையில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதாள அறையை விட்டு வெளியே வந்து அலங்கரித்து 48 நாட்கள் மட்டும் தரிசனம் தருவார் அத்தி வரதர். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த நிகழ்வு வருடம் 1939 , 1979 க்கு பின் 2019 இல் நடைபெறுகிறது. அதுகுறித்த தகவல்களை இனி காண்போம்

வெளியூர் மக்கள் தரிசனம் செய்யும் நேரம் மற்றும் வழிமுறைகள்

ஆதி அத்தி வரதரை தரிசனம் செய்ய சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, பக்தர்கள் அதற்கேற்ற வரையில் தங்கள் தரிசன முறையை அமைத்து கொள்ளலாம்

1. வெளியூர் மக்கள் 48 நாளும் இலவச தரிசனம் செய்யலாம் அல்லது
2. 50 ருபாய் தரிசனம் செய்யலாம் அல்லது
3. 500 ருபாய் தரிசனம் செய்யலாம்

50 ருபாய் தரிசன டிக்கெட் கோவில் மேற்கு கோபுரம் அருகில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதை ஆன்லைன் வழியாகவோ அல்லது இணையம் வழியாகவோ பதிவு செய்ய முடியாது நேரில் வாங்கி மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

2 ம் தேதி ஜூலை 2019 முதல் www.tnhrce.org என்ற இணையத்தளத்தில் ருபாய் 500 செலுத்தி சிறப்பு தரிசனத்திற்கு பதிவு செய்யலாம். இந்த மிக சிறப்பு தரிசன டிக்கெட் ஒரு நாளைக்கு 500 நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

500 ருபாய் டிக்கெட் தரிசன நேரம்

காலை – 11.00 மணி – 250 நபர்கள்
மாலை – 3.00 மணி – 250 நபர்கள்

உள்ளூர் மக்கள் தரிசனம் செய்யும் தேதி மற்றும் நேரம்

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த உள்ளூர் பக்தர்கள், ஆதி அத்தி வரதரை சிறப்பு தரிசனம் செய்ய  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் பக்தர்கள் தங்கள் ஆதார் கார்டுடன், தங்கள் பகுதிக்கு உட்பட்ட வார்டு சேவை மையத்தில் தரிசன சீட்டை இலவசமாக பெற்று கொள்ளலாம். உள்ளூர் மக்கள் இந்த சீட்டின் மூலமாக ஒரு முறை மட்டுமே தரிசனம் செய்ய முடியும்.

மற்றபடி, உள்ளூர் மக்கள் 50 ருபாய் அல்லது 500 ருபாய் தரிசன டிக்கெட் மூலமாகவும் தரிசனம் செய்யலாம். இதற்கு வரைமுறை ஏதும் கிடையாது.

தரிசன நேரம் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

01-ஜூலை-2019
02-ஜூலை-2019
03-ஜூலை-2019

12-ஜூலை-2019
13-ஜூலை-2019
14-ஜூலை-2019
15-ஜூலை-2019
16-ஜூலை-2019
17-ஜூலை-2019
18-ஜூலை-2019
19-ஜூலை-2019
20-ஜூலை-2019
21-ஜூலை-2019
22-ஜூலை-2019
23-ஜூலை-2019
24-ஜூலை-2019

05-ஆகஸ்ட்-2019
06-ஆகஸ்ட்-2019
07-ஆகஸ்ட்-2019
08-ஆகஸ்ட்-2019
09-ஆகஸ்ட்-2019
10-ஆகஸ்ட்-2019
11-ஆகஸ்ட்-2019
12-ஆகஸ்ட்-2019

16-ஆகஸ்ட்-2019
17-ஆகஸ்ட்-2019

பக்தர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு ஏற்பாடுகள்

பஸ் நிலையத்தில் இருந்து கோவில் சென்று திரும்ப செல்ல , பேரூந்து , ஷேர் ஆட்டோ , வேன் போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. இது மட்டுமின்றி வாகன ஆட்டோக்கள் பல இடங்களில் ஒழுங்கு படுத்தப்பட்டு அடையாள படுத்தப்பட்டுள்ளன. காவல் துறை இதற்காக பிரத்தியோக ஏற்பாடுகள் செய்திருக்கிறது.

மேலும் பக்தர்கள் கார் பார்க்கிங் செய்ய தனி இடம், திருவீதி பள்ளம் – திருச்சோலை தெரு அருகில் காவல் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு வாகனங்கள் முறைப்படுத்த தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன, அங்கே கார் மட்டுமே நிறுத்த முடியும் . எக்காரணம் கொண்டோ கோவில் அருகில் வாகனங்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. மேலும் வயதானவர்கள் மற்றும் மாற்று திறனாளிகள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகளும் செய்ய பட்டுள்ளது.

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைக்கும் இந்த அறிய ஆதி அத்தி வரதரை தரிசனம் செய்து அருள் பெறுவோம்

Leave a Reply