கூகுள் adsense கணக்கு தொடங்குதல், மற்றும் ஒப்புதல் பெறுவது எப்படி ?

நீங்கள் youtube வீடியோ அல்லது சொந்தமான இணையதளம் வைத்திருந்தால், கண்டிப்பாக அதன் மூலம் எப்படி வருமானம் ஈட்டுவது என யோசித்திருப்பீர்கள். அதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும், Google Adsense முக்கிய பங்காற்றுகிறது. Google Adsense என்பது இணையதள பதிப்பாளருக்கும், விளம்பரம் செய்ய நினைக்கும் நிறுவனங்களுக்கும் பாலமாக செயல்படுகிறது. கூகிள் Adsense நம்பகத்தன்மை, மற்றும் அதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையால் பலர் விளம்பரம் செய்ய இதை நாடி வருகின்றனர்.

கூகுள் adsense
கூகுள் adsense

நீங்கள் நடத்தும் இணையத்தளமோ , blog அல்லது youtube அதிக வாசகர்களால் பார்க்கப்பட்டால் நீங்கள் கூகிள் Adsense கணக்கை தொடங்க முயற்சிக்கலாம். ஆனால் அது அவ்வளவு சுலபமல்ல, அதற்கு பல்வேறு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன, அதை விரிவாக காண்போம்.

சொந்தமாக இணையதளம் வைத்திருப்பவர்கள் கூகிள் Adsense பெரும் வழிமுறைகள்

 1. இணையதள பெயரை ( domain ) பதிவு செய்து கொள்ளுங்கள்.
 2. இணையதளத்தை பிரசுரித்து அதில் about , பிரைவசி பாலிசி, தொடர்பு கொள்ளும் contact பகுதி என தெளிவாக பட்டியலிடுங்கள்.
 3. வலைப்பதிவு அல்லது ஏதேனும் கட்டுரைகள் குறைந்தபட்சம் 50 வரிகள் அல்லது 350 சொற்களாவது இருப்பது நல்லது. ( இதற்கு குறிப்பிட்ட அளவுகோல் கிடையாது )
 4. உங்கள் இணையதளம் தொடங்கி குறைந்தது ஆறு மாதங்களாவது ஆகி இருக்க வேண்டும்.
 5. உங்கள் இணையத்தளத்தில் html பகுதிகளை நீங்கள் மற்றம் செய்யும் அதிகாரம் உள்ளவராக இருக்க வேண்டும்.
 6. முக்கியமாக 10 லிருந்து 20 வரையிலான ( கட்டுரை / தகவல் ) பக்கங்கள் இருக்க வேண்டும்.
 7. நீங்கள் உபயோகப்படுத்திய அனைத்து புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் உங்களுடையதாக இருக்க வேண்டும், வேறு எங்கேயிருந்து எடுத்திருந்தால் உங்கள் அக்கவுண்ட் முற்றிலும் வாழ்நாள் தடை செய்யப்படும்.
 8. வடிவமைப்பு எளிதாகவும், பயனாளிகளுக்கு புரியும் படியும் இருக்க வேண்டும்.
 9. நீங்கள் பதினெட்டு வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்
 10.  Adsense கணக்கை தொடங்கி இணையத்தில் சம்பாதிக்க தொடங்குங்கள்.

 

youtube வீடியோ வில் கூகுள் Adsense கணக்கை தொடங்கும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

youtube வீடியோ வில் கூகுள் Adsense கணக்கை தொடங்கி விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டலாம். அதற்கான வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் போன்றவற்றை விரிவாக காணலாம்.

 1. உங்களுக்கு சொந்தமான youtube சேனல் ( channel ) இருக்க வேண்டும்.
 2. கடந்த ஒரு வருடத்தில், 4000 மணி நேர youtube விடியோவை பார்வையாளர்கள் கண்டுகளித்திருக்க வேண்டும்.
 3. குறைந்தபட்சம் 1000 சந்தாதாரர்கள் ( Subscribers ) இருக்க வேண்டும்
  உங்கள் வயது குறைந்தபட்சம் 18 ஆக இருக்க வேண்டும்.
 4. தீவிரவாதம் , கொலை , பாலுணர்வை தூண்டும் காணொளி / விடீயோக்கள் நிராகரிக்கப்படும்.
 5. உங்கள் காணொளி வேறு யாருடைய காப்புரிமை பெற்றதாக இருக்க கூடாது.

இந்த விதிமுறைகள் மட்டுமல்லாது Google Adsense கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல் அதன் இணையத்தளத்தில் வெளியிடப்படும். அதை படித்து அதன் விதிமுறைகளை உள்வாங்கி கொண்டு பின்பற்ற வேண்டும். மேலே குறிப்பிட்ட தகுதிகளோடு, நீங்கள் கணக்கு தொடங்கினால், உங்கள் கணக்கு ஒப்புதல் பெறப்பட்டு, விளம்பரதாரர்களுக்கு அனுமதிக்கப்படும். அதன் பின்னர் உங்களது வருமானம், பயனாளர்கள் விளம்பரங்களில் காட்டும் ஆர்வத்தை பொறுத்து மாறுபடும். விளைபரங்களை கட்டுப்படுத்தும் அல்லது நீக்கும் முழு உரிமை, உரிமையாளரான உங்களுக்கு கொடுக்கப்படும்.

கூகிள் Adsense தொடங்கி ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வாழ்த்துக்கள்

Leave a Reply