சென்னையில் நவகிரக கோவில்கள்

சென்னையில் நவகிரக கோவில்கள்

நவகிரக கோவில்கள்

சென்னையில் உள்ள நவகிரக திருத்தலங்கள்

வாழ்க்கையில் வரக்கூடிய இன்ப துன்பங்கள் அனைத்தும், நவக்கிரக அமைப்பால் நிர்ணயம் செய்யப்படுகிறது என்பது பரவலான ஆன்மிக நம்பிக்கையாக இருந்து வருகிறது. நவக்கிரகங்களை வழிபாட்டு தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் உள்ளது. நவகிரக வழிபாடு செய்யவும், நவகிரக தோஷம் உள்ளவர்கள் பரிகாரங்கள் செய்யவும் கும்பகோணம் மட்டுமல்லாது சென்னையில் உள்ள நவகிரக கோயில்களிலும் வழிபாடு செய்யலாம். சென்னையில் உள்ள நவகிரக கோயில்களுக்கு சென்று நவகிரஹகளை வணங்கி, இறைவன் அருள் பெறலாம்.

1. அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில், மாங்காடு (சுக்கிரன்)
2. அருள்மிகு நாகேசுவரர் திருக்கோயில், குன்றத்தூர்  (இராகு)
3. அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில், கோவூர் (புதன்)
4. அருள்மிகு இராமநாதீசுவரர் திருக்கோயில், போரூர் (குரு)
5. அருள்மிகு சோமநாதீசுவரர் திருக்கோயில், சோமங்கலம் (சந்திரன்)
6. அருள்மிகு அகதீஸ்வரர் திருக்கோயில்,கொளப்பாக்கம் (சூரியன்)
7. அருள்மிகு வைத்தீஸ்வரர்  திருக்கோயில், பூந்தமல்லி (அங்ககாரன்)
8. அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில், கெருகம்பாக்கம் (கேது)
9. அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், பொழிச்சலூர் (சனி)

1. அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில், மாங்காடு (சுக்கிரன்)

சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு என்னும் ஊரில்தான் வெள்ளீஸ்வரர் கோவில் இருக்கின்றது. சுக்கிரனுக்கு ‘வெள்ளி’ என்ற ஒரு பெயர் உண்டு. எனவே இக்கோயில் ‘வெள்ளீசுவரர்’ என்ற திருநாமத்தை கொண்டிருப்பதைக் காணலாம்.  ஆகவே வெள்ளிக்கிழமைகளில் தரிசித்து வழிபட்டு வந்தால், அவர்களது குறைகள் நீங்கப்பெறுவதாக ஐதீகம்.

சுக்கிரன் ஒரு கண் பார்வை இழந்தார். சுக்கிரன் கடும் தவம் புரிந்து, தான் இழந்த பார்வையை திரும்ப பெற்றார். ஆகவே ஒரு கண் பார்வை மாறு கண் பார்வை, மங்கலான பார்வை, பார்வை இழப்பு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தலத்திற்கு வந்து வெள்ளீஸ்வரரை வழிபட்டு சென்றால் பலன் பெறுவது நிச்சயம்.

சுக்கிரன் தோஷம் உள்ளவர்கள்,  இங்கு சென்று  வெண்ணிற வஸத்திரம் விரித்து சுலோகம் சொல்வது சிறப்பாகும்.

2. அருள்மிகு நாகேசுவரர் திருக்கோயில், குன்றத்தூர்  (இராகு)

குன்றத்தூரில் உள்ள நாகேசுவரர் திருக்கோயில் ராகுவிற்காக அமையப்பெற்ற ஸ்தலமாகும். இக்கோயில்க்கு வட நாகேஸ்வரர் கோவில் என்றும் கூறுவர்.

நாகதோஷம் உள்ளவர்கள் இக்கோயில்க்கு சென்று நாகேஸ்வரருக்கு,  தினமும் காலை 6.30 மணி, 10 மணி மற்றும் மாலை 5 மணி ஆகிய வேளைகளில் பாலாபிஷேகம் செய்யப்படுகிறது. நாகதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அபிஷேகத்தில் கலந்துகொண்டும், ராகு காலத்தில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்தும், உளுந்து தானியம் மற்றும் உளுந்து சாதம் போன்றவற்றை நைவேத்தியமாக வைத்தும் வழிபாடு செய்யலாம். இதனால் நாகதோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கப்பெற்று திருமணம் மற்றும் மகப்பேறு பாக்கியம் பெறலாம்.

ராகுப்பெயர்ச்சியால் தோஷம் உள்ளவர்களும் இங்கு சென்று வழிபட்டால், தோஷத்திலிருந்து விடு பெறலாம்.

3. அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில், கோவூர் (புதன்)

கல்விக்கு அதிபதியான புதனுக்குரிய பரிகார தலமாக கருதப்படுவது சுந்தரேசுவரர் திருக்கோயில். சுந்தர சோழன் என்னும் மன்னன் இக்கோயிலை கட்டியதாக கருதப்படுகிறது. ‘காமதேனு’ ஈசனை இங்கு வழிபட்டதால் இந்த ஊர் ‘கோவூர்’ என்றழைக்கபெற்றது.

புத தோஷத்தை போக்க, புதன் கிழமைகளில் பச்சைநிற ஆடைகள்  அணிந்து, காலை 7 மணியிலிருந்து 9.30 மணிக்குள்ளாக கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி புதன் பகவானை வழிபட்டால், தோஷத்திலிருந்து விடு பெறலாம்.

4. அருள்மிகு இராமநாதீசுவரர் திருக்கோயில், போரூர் (குரு)

ராஜயோகம் அருளும்  குருவிற்கான ஸ்தலம் இது. குரு தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன் பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். ஆகையால் நவகிரகங்களில் சுபக்கிரகம் என்று அழைக்கப்படுபவர் குரு பகவான். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்ரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை, தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர். எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்ற பழமொழி ஏற்பட்டது.

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்கிறார்.  இவ்வாறு குரு இடம் பெயர்வதை குருபெயர்ச்சி என்று அழைப்பர்.  குரு பெயர்ச்சி சமயத்தில் மக்கள் குரு பகவானுக்காக சிறப்பு வழிபாடுகள் செய்கின்றனர். குருவை நாம் வழிபட்டுக் கொண்டே இருந்தால் அவர் பல நன்மைகளையும் நமக்கு வழங்குவார்.

குரு பகவானுக்கு உகந்த நாள் வியாழன் ஆகும். எனவே சிறப்பு பூஜைகள் எல்லா வாரமும் வியாழன் அன்று செய்யப் படுகின்றன. வியாழக்கிழமையில் விரதம் இருந்து பரிகாரம் செய்யலாம். ஜாதகத்தில் குரு பலவீனமாகவோ, தோஷத்துடனோ இருந்தால், நவமி அன்று சண்டி ஹோமம் செய்வது சிறப்பான பலனை தரும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை வேலையில்லாதவர்கள் போன்றவர்களுக்கு பரிகாரங்கள் இங்கு செய்யப்படுகிறது.

5. அருள்மிகு சோமநாதீசுவரர் திருக்கோயில், சோமங்கலம் (சந்திரன்)

குன்றத்தூருக்கு அருகில் உள்ள சதுர்வேதிமங்கலம் எனப்படும் சோமமங்கலத்தில் அமைந்துள்ளது சோமநாதீசுவரர் திருக்கோயில். சோமன் என்றால் சந்திரன் என்று பொருள். சோமன் தக்ஷனின் சாபத்தால் 16 கலைகளையும் மறந்தார். ஆகவே இத்திருத்தலத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி பெருந்தவம் இருந்து தக்ஷனின் சாபத்திலிருந்து விடுபட்டு சந்திரன் முழு உருவம்பெற்றார். சோமன் சென்று வழிபட்ட கோவில் ஆகையால் சோமநாதீசுவரர் திருக்கோயில் என பெயர்பெற்றது. சந்திர தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு சென்று வழிபட்டால் சந்திர தோஷம் நீங்கும்.

இந்த திருக்கோவிலில் வந்து இறைவனை வழிபட, திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், அறிவுத்திறன் பெருகும். மன உளைச்சல், மன அழுத்தம் தீரும்.

சந்திரனுக்கு உகந்தவை:

  • ராசி : கடக ராசி
  • அதி தேவதை : நீர்
  • நிறம் : வெண்மை
  • தானியம் : நெல், பச்சரிசி
  • வாகனம் : வெள்ளை குதிரை
  • உலோகம் : ஈயம்
  • மலர் : அல்லி
  • ரத்தினம் : முத்து
  • ஸ்தல விருட்சம் : வில்வமரம்

Leave a Reply