தேன் தரும் மருத்துவ பலன்கள்

தேன்
தேன்

1. இஞ்சி சாறுடன், சிறிதளவு தேன் கலந்து அருந்தினால் உடலில் பித்தம் தணியும்.

2. கேரட் சாறு அல்லது தொக்கு உடன் தேன் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் ரத்த சோகை குறையும் வாய்ப்புண்டு.

3. காய்ச்சிய பாலை ஆற வைத்து சிறிதளவு தேன் கலந்து உண்டு வந்தால் இதயம் தூய்மை பெறும் .

4. மாதுளம் பழச்சாறுடன் சிறிதளவு தேன் கலந்து பருகினால் ரத்த உற்பத்தியை தூண்டும் , சோம்பல் குறையும்.

5. காய்ச்சி ஆறவைத்த பாலுடன், தேன் கலந்து இரவில் தூங்கும் முன் பருகி வந்தால் தூக்கமின்மை குறைந்து, நல்ல தூக்கம் வரும்.

6. நாட்டு நெல்லிக்காயின் சாறுடன் சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் இயற்கையாகவே சுரக்கும்.
இன்சுலின் அளவு நாள்பட சீராகும் .

7. அணைத்து வகை பழச்சாறுடன் தேன் கலந்து பருகினால் , உடலுக்கு புத்துணர்ச்சியும் , தெம்பும் உண்டாகும்.
பலகாலம் பருகி வந்தால் இளமை நீடிக்கும்.

8. தேங்காய் பால் உடன் தேன் கலந்து அருந்தினால் குடல் புண் விரைவில் ஆறும் , வருவதையும் தடுக்கும்.

9. தேங்காய் பால் உடன் தேன் கலந்து அருந்தினால் வாய் புண் விரைவில் ஆறும்.

10. ரோஜாப்பூ தொக்குடன் ( குல்கந்து ) பால் அல்லது நீர் சேர்த்து, சிறிதளவு தேன் சேர்த்து பருகி வந்தால் உடல் சூடு குறையும். நீர் கடுப்பு விலகும்.

11. ஆரஞ்சு பழத்துடன், சிறிதளவு தேன் சேர்த்து சாப்பிட்டால், நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

12. எலும்பிச்சை பழச்சாறுடன், தேன் கலந்து பருகினால் இருமல் குறையும்

13. வீக்கம் குறைய அல்லது கட்டிகள் உடைய, சுண்ணாம்புடன் ஒரு துளி தேன் இட்டு தடவ வேண்டும்.

14. தொண்டை தொற்று குணமாக சுண்ணாம்புடன் சிறிது தேன் இட்டு கலந்து , தொண்டைக்குழி மேலே தடவ வேண்டும்.

Leave a Reply