நல்லெண்ணெயின் மகத்துவமும் அதன் மருத்துவ குணமும்

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயின் மகத்துவமும் அதன் மருத்துவ குணமும்

தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சனைகள் குணமாகும். அதுமட்டுமல்லாது பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைக்கும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பதால் முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.
இரவில் தூங்குவதற்கு முன் 3 சொட்டு எண்ணெய் விட்டு தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்வதன்முலம் வலிகளிருந்து நிவாரணம் பெறலாம். குழந்தைகள் வயற்றுவலியின் போது நல்லெண்ணெய் சிறிது எடுத்து தொப்புளை சுற்றி தேய்த்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதைக் கட்டாயம் செய்வது நம் உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்த பெரிதும் உதவியாக இருக்கும். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் எண்ணெய் குளியலை மேற்கொள்ளலாம். எண்ணெய் தேய்த்து குளிப்பதன் மூலம் உடலின் வெப்பம் குறையும், சருமம் புத்துணர்ச்சி பெறும், மூடி பளபளப்பாகும், பொடுகு பிரச்சனையிருக்காது.

நல்லெண்ணெயில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. மேலும் இந்த எண்ணெய் சைவ உணவாளர்களுக்கு மிகச் சிறந்த ஒரு உணவுப் பொருள். ஏனெனில் இந்த எண்ணெயில், முட்டையில் நிறைந்துள்ள புரோட்டீனுக்கு நிகரான அளவில் புரோட்டீனானது நிறைந்துள்ளது. எனவே உணவில் மற்ற எண்ணெய்களை சேர்த்துக் கொள்வதற்கு பதிலாக, இந்த எண்ணெயை சேர்த்தால், இன்னும் பல நன்மைகளைப் பெறலாம். இந்த நல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால் இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.  நல்லெண்ணெயில் உள்ள அதிகப்படியான மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்

அதுமட்டுமின்றி வலுவான எலும்புகள் , செரிமானப் பிரச்சனை வராமல் தடுக்கும், சுவாசக் கோளாறு சரி செய்தல், இரத்த அழுத்தம் வராமல் தடுக்கும்.

Leave a Reply