நோய்களும் அவற்றை குணப்படுத்தும் மருந்தாக காய்கறிகளும்

காய்கறி மருத்துவ குணங்கள்

பீர்க்கங்காய் மற்றும் பாகற்காய் மருத்துவ குணங்கள்

Diabetes எனப்படுகிற சர்க்கரை வியாதிக்கு பீர்க்கங்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் தவறான உணவு பழக்கம் மற்றும் குறைந்த உடலுழைப்பு போன்ற காரணங்களால், எளிதாக சர்க்கரை நோய் நம்மை தாக்குகிறது. இதிலிருந்து விடுபட வாழ்க்கை முறை மாற்றத்தோடு, சரியான உணவு பழக்கங்களையும் கையாள வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் பீர்க்கங்காய் உணவில் சேர்ப்பது நலம். பாகற்காயையும் தேவையான அளவு (குறைந்த விகிதத்தில்) சேர்த்து கொள்ளலாம்.

தேங்காய் மருத்துவ குணங்கள்

Arthritis என்கிற கீல்வாதம் நோய்க்கு தேங்காய் உகந்த மருந்து. கீல்வாத நோய்க்கு மருந்தாகவும், கீல்வாத நோய்கள் வரும் முன்னரே நம்மை காத்து கொள்ளவும் தேங்காயை நேரடியாக உணவில் எடுத்து கொள்ள வேண்டும் ( எண்ணெய் வடிவில் அல்ல ). இளநீர் தேங்காய், தேங்காயை அரைத்தோ உணவில் எடுத்து கொள்ளலாம், இது கீல்வாத நோயை போக்க / குறைக்க பெருமருந்தாக பயன்படும் .

எலும்பிச்சை மருத்துவ குணங்கள்

Thyroid எனப்படுகிற தைராய்டு பிரச்சனைகள் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் மாற்றமாகும். இது ஒவ்வொருவருக்கும் அதன் தன்மைக்கேற்றார் போல் உபாதைகள் இருக்கும். இந்த தைராய்டு பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு எலும்பபிச்சை ஆகும். எலும்பிச்சை சாறு தைராய்டு பிரச்னையை குறைக்க வல்லது.

வெண்டைக்காய் மருத்துவ குணங்கள்

High BP என்று சொல்லப்படுகிற அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உண்ண வேண்டிய காய்கறி வெண்டைக்காய் ! பல நூறு ஆண்டுகளாக, நம் சித்தர்கள் கண்டறிந்த இந்த உண்மை இன்று வெளிநாட்டு கம்பெனிகள் விளம்பரப்படுத்தியவுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழைந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் வெண்டைக்காயை அதிக அளவு உணவில் சேர்த்து கொள்ளலாம்.

வாழைக்காய் மருத்துவ குணங்கள்

Heart attack என சொல்லப்படுகிற மாரடைப்பு வராமல் தடுக்க வாழைக்காய் நமக்கு உதவுகிறது. இதயத்திற்கு உகந்த வாழைக்காயை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் பொரியல் செய்து சாப்பிடலாம். அளவிற்கு அதிகமாகவும் வாழைக்காயை உணவில் சேர்க்கவும் கூடாது.

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள்

கத்தரிக்காய் சிறுநீரக கோளாறு உள்ளவர்களுக்கு மிக உகந்த உணவாக பயன்படுகிறது. பிற்காலத்தில் சிறுநீர் கோளாறு ( kidney Failure ) ஏற்படாமல் தடுக்க உணவில் கத்தரிக்காய் சேர்ப்பது நல்லது.

கொத்தவரங்காய் மருத்துவ குணங்கள்

பக்கவாதம் வந்தவர்கள் கொத்தவரங்காய் சேர்த்த உணவு பதார்த்தங்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும். பக்கவாதம் நோய் ( Paralysis )  வரும் முன்னரே நம்மை காத்து கொள்ள கொத்தவரைங்காய் காய்கறியை சம்பாரிலும், பொரியல் மற்றும் கூட்டாகவும் செய்து சாப்பிடலாம்.

வெண்பூசணிக்காய் மருத்துவ குணங்கள்

பூசணியின் மகிமையை அறிந்து, பல குறிப்புகளை விட்டு சென்றுள்ளனர். வரும் தலைமுறையை புற்று நோய் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளதால், பூசணிக்காயை வாரத்தில் இரு நாட்களாவது எடுத்து கொள்வது நலம். மேலும் விலை குறைவான காய்கறிகளை மலிவாக என்னும் பழக்கத்தை நாம் விட்டொழிக்க வேண்டும்.

புடலங்காய் மருத்துவ குணங்கள்

Insomnia என்றழைக்கப்படுகிற தூக்கமின்மை பலருக்கு, 40 வயதிற்கு மேல் வெகுவாக தாக்கும். மன நிம்மதியின்மையால் தூக்கமின்மை ஏற்படுகிறது என பலர் எண்ணினாலும் இது ஒரு உபாதையாகவும் இருக்க கூடும் என பின்னர் தான் புரிந்து கொள்கின்றனர். நாம் தொடர்ந்து புடலங்காய் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை வெகுவாக குறைந்து கண்களுக்கும், உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

அரசாணிக்காய் மருத்துவ குணங்கள்

Hernia என்ற குடலிறக்க நோய்க்கு அரசாணிக்காய் உகந்த உணவு, வரும் முன் காப்பதே சிறந்தது என்கிறது சித்த மருத்துவம். அதனால் தான் நம் முன்னோர்கள் உணவையே மருந்தாக உட்கொண்டார்கள். ஹெர்னியா என்கிற குடலிறக்க நோயிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள அரசாணிக்காயை சமைத்து சாப்பிட வேண்டும். கூட்டு , பொரியல், சாம்பார் போன்ற வகைகளில் சாப்பிடுவது நலம்.

கோவைக்காய் மருத்துவ குணங்கள்

Cholesterol எனப்படும் கொழுப்பு நோய்க்கு கோவைக்காய் மிக நல்ல தேர்வு. கோவைக்காய் விலை குறைவாக இருந்ததினால் அதை நம் தொட்டு கூட பார்த்ததில்லை. ஆனால் உடல் கொழுப்பை குறைக்க இதைவிட சிறந்த உணவே இல்லை என அறுதியிட்டு கூறலாம். கோவைக்காயின் மகிமையை இப்போது பலர் புரிந்து கொண்டுள்ளதனால், பல மாநிலங்களுக்கு ஏற்றுமதி ஆகிறது, எனவே இதை தவிர்த்தல் கூடாது.

முருங்கைக்காய் மருத்துவ குணங்கள்

ஆஸ்துமா என சொல்லப்படுகிற சுவாச குழலை பாதிக்கும் நோய்க்கு, அரு மருந்து முருங்கைக்காய் தழை அல்லது முருங்கை காய். முருங்கை இலையை குறிப்பிட்ட அளவிற்கு வேகவைத்த தண்ணீருடனும் சேர்த்து சாப்பிடுவது ஆஸ்துமாவிற்கு நலம். முருங்கை காயும் ஆஸ்துமாவை குணப்படுத்தும் வல்லமை கொண்டவை. முருங்கை இலை மற்றும் முருங்கை காயை நீண்டகாலமாக உணவில் சேர்த்தால் ஆஸ்துமா பிரச்னை படிப்படியாக குறையும் அல்லது நம்மை விட்டு விலகும்.

மேலே குறிப்பிட்ட அணைத்து காய்கறிகளையும் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்விற்கு அடிகோலிடுங்கள். பதப்படுத்தப்பட்ட, பொட்டலத்தில் அடைக்கப்பட்ட உணவை தவிர்த்து, இயற்கையாக சமைத்து உடனே உண்ணும் பழக்கத்தை கடைபிடிப்போம் !

Leave a Reply