மூணாறு சுற்றுலா தளம்

மூணாறு சுற்றுலா

மூணாறு சுற்றுலா
மூணாறு சுற்றுலா

 

மூணாறு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மலைவாசஸ்தலங்களுள் ஒன்றாகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் மூணாறு தேனிலவுக்கு பெயர் போன சுற்றுலா தலமாகும். முதிரப்புழா, நல்லத்தண்ணி மற்றும் குண்டலா என்னும்  மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில்  அமையப்பெற்றதால் இவ்விடம் மூணாறு என்று பெயர்பெற்றது.

கடல் மட்டத்திலிருந்து 1600 அடி உயரத்தில் இருப்பதாலும் ரம்மியமான இயற்கை அழகை கொண்டிருப்பதாலும் ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கோடை ஓய்விடமாக இருந்தது. ஆங்கில கன்ட்ரி காட்டேஜ்களின் வடிவத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் இன்றும் உயர்ந்து நிற்கின்றன.

கன்னிக்காடுகள், வனாந்தரங்கள், உருட்டும் மலைகள், கண்ணுக்கனிய பள்ளத்தாக்குகள், எண்ணற்ற நீரோடைகள், பெரிய நீர்வீழ்ச்சிகள், பரந்து விரிந்த தேயிலைத் தோட்டங்கள் மற்றும் வளைந்து வளைந்து செல்லும் நடைபாதைகள் மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு அலாதியான அனுபவத்தை தரக்கூடியதாகும்.

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்  மூணாரின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும்.

குறிஞ்சி பருவத்தில் நீலநிற குறிஞ்சி மலர்களால் மலைகளும் பள்ளத்தாக்குகளும் நிறைந்திருக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியை இருக்கும். தென்னந்தியாவின் உயரமான சிகரமான 2,695 மீட்டர் உயரமுள்ள ஆனைமுடி இங்கு தான் அமைந்துள்ளது. இது மலையேற்றத்திற்கு மிகவும் ஏற்ற இடமாகும். பரந்த தேயிலைத் தோட்டங்கள், அழகிய நகரங்கள், முறுக்குப் பாதைகள், மற்றும் விடுமுறை வசதிகள் இந்த இடத்தை மிகவும் விரும்பப்படும் சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக வைத்திருக்கிறது.

மூணாறு இரவிகுளம் தேசியப்பூங்கா

மூணாறுக்கு அருகில் உள்ள முக்கியமான இடங்களில் ஒன்று இரவிகுளம் தேசியப்பூங்கா. இந்தப் பூங்கா நீலகிரி வரையாடு எனப்படும்  அருகி வரும் விலங்கிற்கு பெயர்பெற்றது. 97 சதுர கி.மீ. பறந்து  விரிந்துள்ள இந்தப் பூங்கா, பல்வேறு வகை அரிய பட்டாம்பூச்சிகள், விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழ்விடமாகும். மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகும். அதிகாலை நேரங்களில் மூடுபனியினால் போர்த்தப்பட்டிருக்கும் தேயிலைத் தோட்டங்கள்  கண்கவர் காட்சியாக இருக்கும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறைப் பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்  மேற்குத் தொடர்ச்சி மலையின் இந்த பகுதியில் ஆண்டு முழுவதும் பூத்திருக்கும்

மூணாறு

மாட்டுப்பெட்டி மூணாறு

சுற்றுலா பயணிகள் அதிகம்  வருகைத்தரும் மற்றொரு முக்கிய இடம் மூணாறு நகரத்திலிருந்து 13 கிமீ தூரத்தில் அமைந்திருக்கும் மாட்டுப்பெட்டியாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மாட்டுப்பெட்டி அதன் கல்கட்டு அணை மற்றும் அழகிய ஏரிக்காக புகழ்பெற்றது. அதை சுற்றியுள்ள மலைகள் மற்றும் நிலபரப்பினை அனுபவிக்க வழங்குவது மட்டுமல்லாது, மாட்டுப்பெட்டி  ஆனந்தமான படகு சவாரியையும் வழங்குகிறது. இந்த பகுதியின் இன்னொரு சிறப்பு  இந்தோ-ஸ்விஸ் கால்நடை திட்டத்தினால் நடத்தப்படும் பால்பண்ணை aagum. இங்கு வெவ்வேறு உயர் இரக பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.

மூணாறு பள்ளிவாசல்

மூணாறு

மூணாறில் உள்ள சித்திரப்புரத்திலிருந்து 3 கிமீ தொலைவில் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இது  கேரளாவின் முதல் நீர்மின் திட்டமாகும். இயற்கை எழில் மிகுந்த இப்பகுதி பார்வையாளர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். அதனால் சுற்றுலா பயணிகளின் தவற விடக்கூடாத பட்டியலில் இதுவும் ஒன்று.

மூணாறு சின்னக்கனால் & ஆனையிறங்கல்

மூணாறு

மூணாறு நகரத்திற்கு அருகில் சின்னக்கனாலும் பவர்ஹவுஸ் நீர்வீழ்ச்சியும் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியானது  கடல் மட்டத்திலிருந்து 2000 மீட்டர் உயரத்தில் செங்குத்தானப் பாறையிலிருந்து கொட்டுகிறது. இவ்விடம் மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் கண்கவர் காட்சிகள் செறியப்பெற்றுள்ளது. சின்னக்கனாலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரம் பயணித்தால் நீங்கள் ஆனையிறங்கலை அடையலாம். ஆனையிறங்கல், மூணாறிலிருந்து 22 கிமீ தூரத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களின் பசுமையான விரிப்பாகும். தேயிலைத் தோட்டங்களும் பசுமைக்காடுகளும் நிறைய நீர்த்தேக்கங்களினூடே பயணிக்கும் இப்பயணம்  ஒரு மறக்க முடியாத அனுபவம்.

தேயிலை அருங்காட்சியகம்

தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி என்று வரும் போது, மூணாறு தனக்கென்று ஒரு மரபினைக் கொண்டிருக்கிறது. இந்த மரபினை கருத்தில் கொண்டும் கேரளாவின் உயர்ந்த இடங்களில் தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியின் சில அற்புதமான மற்றும் சுவாரசியமான அம்சங்களைப் பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்காகவும், மூணாறில் டாடா டீயினால் சில ஆண்டுகளுக்கு முன்னர் தேயிலைக்கென்று ஒரு தனிச்சிறப்பான ஒரு அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. இந்த தேயிலை அருங்காட்சியகம் கலைப்பொருட்கள், புகைப்படங்கள் மற்றும் இயந்திரங்களை காட்சிக்கு வைத்துள்ளது; இவை அனைத்தும் மூணாறில் தேயிலைத் தோட்டங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைப் பற்றிய கதையை இந்த உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்திருக்கின்றன. பார்வையாளர்களை கவரும் இந்த அருங்காட்சியகம் டாடா டீயின் நல்லத்தண்ணி எஸ்டேட்டில் அமைந்துள்ளது.

அருகில் உள்ள நகரங்களின் தொலைவு :

சென்னை                     – 595km

பெங்களூரு                  – 455km

கோவை                         – 158km

மைசூரு                          – 337km

மதுரை                            – 153km

திருச்சி                            –  255km

சேலம்                               – 273km

ஹைதராபாத்          – 1023km

கொச்சின்                    – 130km

ஆலப்புழா               – 180km

தேக்கடி                          – 106km

பொள்ளாச்சி             – 120km

 

மூணாறு சில தகவல்கள் :

உயரம்                                                             – 1600 m கடல் மட்டத்திலிருந்து சீசன்

சுற்றுலா சீசன்                                         – ஆகஸ்ட் முதல் மே மாதம் வரை

ஆடைகள்                                        – பருத்தி உடைகள்; மழைக்கால உடைகள்

வெப்ப நிலை                                 – ௦~25 deg C

தங்குமிடம்                                      – 1000/ நாள் முதல்

விமான நிலையம் அருகில்          – மதுரை (தமிழ்நாடு ) 140km

இரயில் நிலையம் அருகில்          – தேனி (தமிழ்நாடு ) 60km

Leave a Reply