வட ஸ்ரீரங்கம்

வட ஸ்ரீரங்கம்

சென்னையில் _ ஒரு_ ஸ்ரீரங்கம்

வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படும் இக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்காவில் உள்ள தேவதானம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

ஆயிரம் வருடம் பழமையான இக்கோயிலை சாளுக்கிய மன்னரால் கட்டப்பட்ட ஆலயம் இது. ஸ்ரீரங்கத்தில் உள்ள ரங்கநாதரை விட தேவதானம் பெருமாள் அரை அடி நீளம் அதிகமானவர். ஆதிசேஷன் மேல் ஆனந்தமாக சயித்திருக்கிறார் தேவதானம் பெருமாள்.

ஐந்து தலை ஆதிசேஷன் தனது உடலை மூன்று அடுக்கு படுக்கையாக மாற்றி, தன் தலையை குடையாக மாற்றி கொண்டுள்ளது. இந்த ஆதிசேஷன் மேல் யோக சயனத்தில் இறைவன் காட்சியளிக்கிறார். மரக்கால் படியை தலைக்கு உயரமாக வைத்துக்கொண்டு 18 அடி நிலத்தில் அருள்பாலிக்கிறார். தேவதானம் பெருமாள் தாமரை மலர் கையிலேந்திய ஸ்ரீ லட்சுமி தேவி, அடுத்து நீலோத்பல மலர் ஏந்திய பூமா தேவி ஆகியோர் உடன் காட்சிபுரிகிறார்.

தல வரலாறு

பெருமாள் செய்த சேவைக்கு நன்றி செய்யும் விதமாக தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அளித்த தானம். ஆகையால் இக்கோயில் தேவதானம் என்று பெயர் பெற்றது.

கோவிலின் சிறப்பு
இந்த  தேவதானம் பெருமாள் கல்லால் செதுக்கப்பட்டவர் அல்லர். சுதை, திருமேனி முழுதும் சாளக்ராம கற்களால் வடித்தது.

சுதை சாளக்ராம விக்ரஹம் என்பதால் அபிஷேகம் இல்லை.

மீஞ்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி நிறைய மினி பஸ், ஆட்டோ கிடைக்கிறதால் வயல் வழியே சென்று ரங்கநாதனாரை பார்க்கலாமே.

Leave a Reply